Sachin tendulkar : கிரிக்கெட் கடவுள் சச்சினை பெருமைப்படுத்திய சார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம்!
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் மற்றும் இந்திய முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரும் ஆனவர் சச்சின் டெண்டுல்கர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் 24/04/2023 அன்று தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்நிலையில், சச்சினின் 50 ஆவது பிறந்தநாள் அன்று அவரை கௌரவிக்கும் விதமாக சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ஸ்டாண்டிற்கு அவரது பெயரை சூட்டி பெருமைப்படுத்தியுள்ளது.
ஏப்ரல்,1988 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைப்பெற்ற போட்டியின் போது பாலைவன புயல் ஏற்பட்டது. அதன் பிறகு சச்சின் 143 ரன்களை விளாசினார்.
அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் சச்சினுக்கு இந்த சிறப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் ஒரு கேட்டிற்கு சச்சின் மற்றும் ப்ரைன் லாராவின் பெயர்களை சூட்டி பெருமைப்படுத்தியுள்ளது அந்த மைதானத்தின் நிர்வாகம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -