HBD Sachin : ஹேப்பி பர்த்டே மாஸ்டர் தி ப்ளாஸ்டர்.. சச்சின் 50வது பிறந்தநாள் இன்று!
சச்சின் தனது வாழ்க்கையில் படைத்த சாதனைகளை பற்றி விரிவாகப் பார்ப்போம்..
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் - சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். சச்சின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 329 இன்னிங்ஸ்களில் 15,921 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 18,426 ரன்கள் எடுத்துள்ளார்.
நூறுமுறை நூறு அடித்து சாதனை - சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் இவர் மட்டும்தான்.
அதிக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய சாதனை - சச்சின் டெண்டுல்கர் அதிக உலகக் கோப்பைகளை விளையாடியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.சச்சின் டெண்டுல்கர் தனது முதல் உலகக் கோப்பையை 1992 இல் விளையாடினார். இதற்குப் பிறகு, அவர் 1996, 1999, 2003, 2007 மற்றும் 2011 உலகக் கோப்பையில் விளையாடியுள்ளார்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் - சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 51 சதங்களும், 68 அரைசதங்களும் அடித்துள்ளார். 2,127 முறை பவுண்டரி லைனுக்கு பந்தை அடித்துள்ளார்
அதிக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சாதனை - சச்சின் டெண்டுல்கர் தனது 22 ஆண்டுகால வாழ்க்கையில் 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -