MS Dhoni - Sakshi: குடும்பத்துடன் ரோம் நகரில் தோனி; சமீபத்திய க்ளிக்ஸ்!
மகேந்திர சிங் தோனி என்ற பெயர் தெரியாதவர் இருக்க முடியாது. இவர் தனது மனைவி ஷாக்சி, மகள் Ziva உடன் ரோம் நகரை சுற்றிப்பார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளனர். இதில் குடும்பத்துடன் உணவு சாப்பிடுவது ரசிகர்களை கவனத்தை ஈர்த்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த அம்பானி- ராதிகா மெர்சன்ட் இருவரின் திருமணத்துக்கு முந்திய சிறப்பு நிகழ்வில் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இது இத்தாலியில் நடைபெற்றது. கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இந்நிலையில், ரோம் நகரில் மகேந்திர சிங் தோனி - சாக்ஷி சிங் இருவரும் சுற்றிப் பார்த்த புகைப்படங்கள்..
சூரிய உதயம், ஆரஞ்சு பழ மரம் உள்ளிட்டவற்றின் புகைப்படத்தினையும் சாக்ஷி பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது காதலி சாக்ஷியை 2010 ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று டேராடூனில் திருமணம் செய்தார். தோனி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க மாட்டார். ஐ.பி.எல்.லில் மட்டுமே தோனியை காண முடியும். ஏற்கனவே ரசிகர்கள் அவரை காணும் ஆவலில் இருக்கும்போது அதற்கு ஓரே ஸ்சோர்ஸ் சாக்ஷி மட்டுதான். அவர் தனது சமூக வலைதளத்தில் தோனி பற்றிய அப்டேட்களை வழங்குவார். தோனி தலைமுடி நீளமாக வளர்த்து பழைய கேப்டன் கூல்லாக இருக்கிறார். ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தோனி மற்றும் சாக்ஷி ஜோடிக்கு பிப்ரவரி 6, 2015 அன்று பெண் குழந்தை பிறந்தது. ஜிவா தோனி இப்போது நாட்டில் மிக முக்கியமான பிரபலமாகிவிட்டார்.
தோனியும் சாக்ஷியும் சிறுவயதிலிருந்தே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். இருவரது குடும்பமும் நெருங்கிய நட்புடன் இருந்தவர்களே.. கொல்கத்தாவில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் சந்தித்தனர். கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் நகரில் போட்டிக்காக தங்கியிருந்த இடத்தில் இருவரும் சந்தித்தனர். ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவியான சாக்ஷி, இந்திய அணி தங்கியிருந்த போது, தாஜ் பெங்கால் நிறுவனத்தில் பயிற்சியாளராக இருந்தார். அதன்பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -