Sara Tendulkar : ‘எனக்கு ட்விட்டரில் அக்கவுண்ட்டே கிடையாது’ போலியான ட்விட்டர் கணக்கு குறித்து பதிவிட்ட சாரா டெண்டுல்கர்!
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசமீப காலமாகவே சாரா டெண்டுல்கரும் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய வண்ணம் இருந்தன.
மேலும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண வந்த சாரா டெண்டுல்கர், சுப்மன் கில்லை உற்சாகப்படுத்துவது போன்ற வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வந்தன.
கூடுதலாக X தளத்தில் சாரா டெண்டுல்கரின் பெயரில் இயங்கி வந்த கணக்கிலிருந்து சுப்மன் கில் குறித்த பதிவுகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
இதனையடுத்து சாரா டெண்டுல்கர், “ சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கிற்காகவும் உண்மையை பறைசாற்றும் வகையிலும் இருக்க வேண்டும்; அவற்றை துஷ்பிரயோகம் செய்ய கூடாது என்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
மேலும் தனக்கு X தளத்தில் கணக்குகளே இல்லை எனவும்..இணையத்தில் வைரலாகும் டீப் ஃபேக் போட்டோ குறித்தும் அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -