Ruturaj Gaikwad : நீண்ட கால காதலியை கரம்பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்!
சென்னை சூப்பர் கிங்ஸின் தொடக்க ஆட்டகாரர் ருதுராஜ் கெய்க்வாட் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி மக்களிடையே பிரபலமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதுவரை நான்கு சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். அதில் இரண்டு முறை சென்னை அணி கோப்பையை வென்றது. ஐபிஎல் முடிந்த கையுடன் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம் செய்து கொண்டார்.
உத்கர்ஷா பவார் எனும் கிரிக்கெட் வீரங்கனையை மணந்து கொண்டார். உத்கர்ஷா, மகாராஷ்டிராவுக்கான உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவர்களின் மெஹந்தி விழா 1 ஜூன் 2023 அன்று நடந்தது. பின்னர், நேற்று திருமணம் நடந்தது.
நீண்ட காலமாக காதலித்து வந்த இந்த கிரிக்கெட் ஜோடி புறாக்கள், நேற்று (04.06.2023) கரம் பிடித்தனர்
இந்த திருமணத்தில் பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -