Rohit Sharma : ‘உலக கோப்பை சவால் நிறைந்தது..’ இந்திய வீரர்களை பற்றி பேசிய ரோஹித் ஷர்மா!
13 வது உலக கோப்பை போட்டி இந்தியாவில் 9 நகரங்களில் நடக்கவுள்ளது.
இந்தியா விளையாடவுள்ள 9 லீக் போட்டிகள் இடைவெளி விட்டு விட்டு 34 நாட்கள் நடக்கிறது. இதற்காக 8,400 கி.மீ பயணிக்க வேண்டியுள்ளது.
இந்திய அணி தனது முதல் போட்டியை ஐந்து முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியுடன் அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் மோதுகிறது.
இந்த உலக கோப்பை போட்டியை பற்றி ரோஹித் ஷர்மாவிடம் கேட்ட போது “20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தாக்கம் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக தெரிகிறது . இந்த உலக கோப்பை போட்டியிலும் அதே அதிரடி ஆட்டத்தை வீரர்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.” என பேசினார்
“12 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடந்த உலக கோப்பை போட்டியை வென்றது இந்தியா. சொந்த மண்ணில் உலக கோப்பை விளையாடுவது அற்புதமான அனுபவம். ரசிகர்கள் உலக கோப்பையை பார்க்க உற்சாகத்துடன் உள்ளனர்.” என்று கூறினார் ரோஹித் ஷர்மா.
மேலும் பேசிய அவர், “ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் நின்று ஆடுவார்கள். தற்போது அது மாறிவிட்டது. இந்த உலக கோப்பை கடுமையான போட்டியாக இருக்கும். எப்போதையும் விட நம்பிக்கையுடனும் நேர்மை எண்ணத்துடன் இந்திய வீரர்கள் விளையாடுகின்றனர்.இருப்பினும் இந்த உலக கோப்பை மிக சவாலான ஒன்றுதான்” என்று கூறினார்.