Rinku Singh : முதல் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கிய சிக்ஸர் நாயகன் ரிங்கு சிங்!
கடந்த மார்ச் மாதம் நடந்த ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதிலும் குறிப்பாக ரிங்கு சிங் என்ற இளம் வீரர் கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார்.
இதில் குஜராத் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது கொல்கத்தா அணி. அப்போது தனி நபராக 5 சிக்ஸர்களை அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
இதன் மூலம் பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரிங்கு சிங் பலரின் பாராட்டையும் பெற்றார்.
இவரின் சிறப்பான ஆட்டத்தை கவனத்தில் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம், தற்போது இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அளித்துள்ளது
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ரிங்கு சிங் நேற்று முதல் போட்டியில் களமிறங்கினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -