Ravindra Jadeja: இந்தியாவின் காப்பான்! நெருக்கடி நாயகன் ஜடேஜாவின் டாப் 10 சிறந்த இன்னிங்ஸ்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியவுக்கு எதிராக 2020/21ல் நடந்த இந்த தொடரின் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தடுமாறிய போது ஹர்திக் பாண்ட்டியாவுடன் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
2014-ல் இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்ஸில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி ஜடேஜாவின் இந்த அரைசதம் பெரிதும் உதவியது.
2011 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக எம்.எஸ் தோனியுடன் இணைந்து இந்திய் அணியை சரிவில் இருந்து மீட்டார், இருப்பினும் இந்தப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
2014 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான நடந்த இந்த போட்டியில் இந்திய அணி டை செய்ய ஜடேஜாவின் இந்த இன்னிங்ஸ் உதவியது.
2020 ஆம் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சிக்கலில் இருந்த போது சிறப்பாக விளையாடி சென்னை அணியை வெற்றி பெற செய்தார்.
2014-ல் நியூசிலாந்து தொடரின் இறுதி ஒரு நாள் போட்டியில் ஜடேஜா இந்திய அணியை தடுமாறிய போது சரிவில் இருந்து மீட்டார் ஜடேஜா. ஆனால் இந்தப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
2019 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியை இந்திய ரசிகர்கள் யாராலும் ஜடேஜாவின் இன்னிங்ஸை மறக்க முடியாது. இந்திய அணி 92/6 ரன்களுக்கு தடுமாறிய நிலையில் வெற்றியின் விளிம்பை அழைத்துச்சென்றார்.
2021 ஐபிஎல்லில் ஆர்சிபி வீரர் ஹர்ஷல் பட்டெலின் ஒரே ஒவரில் 37 ரன்கள் ஜடேஜா விளாசினார்
2019-20 பார்டர் கவாஸ்கர் தொடரில் பாக்சிங் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரகானேவுடன் இணைந்து இவர் அடித்த இந்த அரைசதம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற முக்கிய காரணமாக இருந்தார். கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார்.