Fastest T20 century: கிறிஸ் கெய்ல் டூ ரிஷப் பண்ட் வரை.. டி20 வரலாற்றில் அடிக்கப்பட்ட டாப் 5 அதிவேக சதங்கள்!
T20 கிரிக்கெட் வரலாற்றில் 28 பந்துகளில் சைப்ரஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து உலக சாதனை படைத்திருந்தார் எஸ்டோனியா வீரர் சாஹில் சவுகான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசையத் முஷ்டாக் அலி கோப்பையில் திரிபுரா அணிக்கு எதிராக 28 பந்துகளில் சதம் அடித்தார் குஜராத் வீரர் உர்வில் பட்டேல். இதன் மூலம் டி20யில் இந்தியர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிவேக சதம் இதுவாகும்.
2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் புனே அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் அடித்தார். மேலும் அந்த போட்டியில் 175 ரன்கள் அடித்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இது வரை தனி நபர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச ஸ்கோராக உள்ளது.
2018 ஆம் ஆண்டு நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பையில் ஹிமாச்சல் மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டியில் 32 பந்துகளில் சதம் அடித்திருந்தார் ரிஷப் பண்ட். அன்றைய காலக்கட்டத்தில் இந்தியர் ஒருவரால் டி20யில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக இருந்தது.
தென் ஆப்பரிக்காவில் 2018ஆம் ஆண்டு நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நார்த் வெஸ்ட் வீரர் வில்லியம் லுபே, லிம்பொப்போ அணிக்கு எதிராக 33 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம், தென் ஆப்பிரிக்கர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -