Ravi shastri: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் இவர் தானா..? பேட்டியில் பேசிய ரவி சாஸ்திரி!
சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியின் மோசமான ஃபார்ம் பேசுபொருள் ஆகியுள்ளது. சமூக வலைதளங்கள் முழுவதும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்சி குறித்தும் வீரர்கள் தேர்த்தெடுக்கப்படும் முறை குறித்தும் பல்வேறு கருத்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமேலும், கிரிக்கெட்டின் மூன்று ஃபார்மெட்களுக்கும் ஒரே கேப்டன் என்பதால் பணி சுமை காரணமாக வீரர்கள் தங்கள் முழு ஆட்டத்தை வெளிபடுத்த முடிவதில்லை என்ற கருத்தும் பரவி வருகிறது.
கூடுதலாக இந்திய டி20 அணியின் மோசமான ஃபார்மை கருத்தில் கொண்டு அடுத்த டி20 கேப்டன் யார் என்ற விவாதமும் எழுந்துள்ளது.
இதற்கிடையே ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஹர்திக் பாண்டியா தான் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், ஹர்திக் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட அவரது உடல் ஒத்துழைக்காது என்பது தெரிந்த விஷயமே, வரும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு அவர் ஃபிட்டாக இருந்தால் ஹர்திக் தான் புதிய 20 கேப்டன் என்றும் கூறியுள்ளார்.
கூடுதலாக, ஐ.பி.எலில் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா சிறப்பாக கேப்டன்சி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது ரவி சாஸ்திரியின் இந்த கருத்து குறித்து ட்வீட்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -