SL Vs Oman : உலக கோப்பை கிரிக்கேட் போட்டியின் தகுதி சுற்றில் ஓமனை வீழ்த்திய இலங்கை அணி!
உலக கோப்பை கிரிக்கேட் போட்டி தகுதி சுற்று ஜிம்மாப்வேயின் புலவாயோ மற்றும் ஹராரே ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.நேற்று 11வது லீக் ஆட்டத்தில் ஓமனை எதிர்கொண்டது இலங்கை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடாஸ் வென்ற இலங்கை அணி ஓமன் அணியை பேட் செய்ய அழைத்தது.
இலங்கை அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாத ஓமன் தடுமாறியது. குறிப்பாக இலங்கை அணியின் ஹசரங்கா சிறப்பாக பந்து வீசினார்.
30.2 ஓவர்கள் வரை தாக்கு பிடித்த ஓமன் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
எளிமையான இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டகாரர்களான கருணாரத்னே மற்றும் பதும் நிசாங்கா ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
15 ஓவரில் 100 ரன்கள் அடித்து இலங்கை அணி வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஹசரங்கா தலா 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதற்கு முன்னால் நடந்த போட்டியில் ஹசரங்கா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -