PAK Vs AFG: வீண் போன குர்பாஸ் சதம் ..கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்!
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடருக்காக இரு அணிகளும் இலங்கை சென்றுள்ளது. இதில் இரண்டாவது போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக கூறியது.
ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை தகர்க்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது.
இருவரின் பார்ட்னர்ஷிப்பை 39.5 ஓவரில் தகர்த்தது பாகிஸ்தான் . தொடக்க ஆட்டகாரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 151 ரன்கள் எடுத்தார்.
50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது ஆப்கானிஸ்தான். 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலைய இலக்குடன் களம் இறங்கியது பாகிஸ்தான் அணி.
தொடக்க ஆட்டக்காரர்களான ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக் இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்து வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் வீரர்கள் என்ன செய்வதன்று அறியாமல் தவித்தனர்.
இறுதியாக பாகிஸ்தான் பந்துவீச்சாளர் நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவூப் சிறப்பாக ஆடி திரில் வெற்றி பெற்றனர்.