இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? இந்தியா - நியூசிலாந்து அணி மும்பையில் மோதல்!
உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
கடந்த உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது.
நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ரச்சின் ரவீந்திரா உள்ளார்.
பேட்டிங், பவுலிங்கில் ரவீந்திரா அசத்துகிறார்
பீல்டிங்கில் உலகத் தரம் வாய்ந்த அணியாக நியூசிலாந்து உள்ளது.
பந்துவீச்சிலும் நியூசிலாந்து அணி சிறப்பான அணியாக விளங்குகிறது
தொடர்ந்து 5வது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி 8வது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணியின் நம்பிக்கையாக விராட் கோலி உள்ளார்.
இந்திய அணி இந்த தொடரில் தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் உள்ளார்
உலகக் கோப்பைத் தொடரில் 2 சதங்களுடன் விராட் கோலி 500 ரன்களை கடந்து உள்ளார்.
இந்திய அணிக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.