ஒரு நாள் சர்வதேச போட்டியின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்த சுப்மன் கில்!
ஒரு நாள் போட்டிக்கான வீரர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாகிஸ்தான் அணியின் கேப்டனும், அந்த அணியின் நட்சத்திர வீரருமான பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் சுப்மன் கில் 830 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நீண்ட காலமாக ஒரு நாள் சர்வதேச போட்டியின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பாபர் அசாம் தற்போது 824 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் டி காக் 771 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.ஐ சி சி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் (2023) தென் ஆப்பிரிக்க அணி தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் விராட் கோலி ஒரு புள்ளி பின்தங்கி 770 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை தக்கவைத்துள்ளார்.கடந்த உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது 49வது சதத்தை பதிவுசெய்தது மட்டும் இல்லாமல் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் வார்னர் 743 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.2017ல் 880 புள்ளிகளுடன் முதல் இடத்தில் வார்னர் இருந்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -