மேக்ஸ்வெல்லை போல் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி காட்டிய பேட்ஸ்மேன்கள்!
உலகக் கோப்பையின் நேற்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் குவித்தது. இலக்கை அடைய ஆஸ்திரேலிய அணி சற்று தடுமாறிய போது, அணிக்கு பக்கபலமாக இருந்த மேக்ஸ்வெல் சேஸிங்கில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். இவரை போன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் சேஸிங்கில் அதிக ரன்களை குவித்த முதல் ஐந்து வீரர்களை பற்றி பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒருநாள் போட்டிகளில் இலக்கை துரத்தும்போது இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை மேக்ஸ்வெல் (Glenn Maxwell)பெற்றார். ஆஸ்திரேலியா வீரரான இவர், அஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 201 ரன்களை அவுட் ஆகாமல் குவித்து பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கிறார்.
பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான் (Fakhar Zaman)தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடிய போது 193 ரன்களை விளாசினார். இந்த சாதனை 2021 ஆம் ஆண்டில் நடந்தது. இவ்வளவு நாட்கள் முன்னிலையில் இருந்த ஃபக்கர், மேக்ஸ்வெல் படைத்த சாதனையால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
2011 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் (Shane Watson) பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடிய போது 185 ரன்களை அவுட் ஆகாமல் அடித்தார். இவர் தற்போது பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறார்
இந்திய வீரர் மற்றும் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி (MS Dhoni)இலங்கைக்கு எதிராக விளையாடிய போது 183 ரன்களை அவுட் ஆகாமல் அடித்து விளாசினார். 2005ல் இந்த சாதனையை புரிந்த தோனி நான்காவது இடத்தில் உள்ளார்.
விராட் கோலியும் (Virat Kohli) தோனியை போல 183 ரன்களை எடுத்து சாதனை புரிந்து ஐந்தாம் இடத்தில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இந்த போட்டியில் 183 ரன்களை எடுத்த பின் அவுட்டானார் விராட்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -