NRK Vs SS : அபார ஆட்டத்தால் அசத்தல் வெற்றி பெற்ற நெல்லை அணி!
டி.என்.பி.எல் 13வது லீக் போட்டியில் சேலம் அணியை எதிர்கொண்டது நெல்லை அணி. மழையால் ஒரு மணி நேரம் தாமதமான ஆட்டம் பின்னர் தொடங்கியது.
டாஸ் வென்ற நெல்லை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய சேலம் அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் அமித் சாத்விக், ஆர்.கவின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் களம் இறங்கிய கௌசிக் காந்தி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தார்.
கௌசிக் காந்தி தவிர மற்றவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 16 ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. 45 மணி நேர போட்டி பாதிக்க பட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 16 ஓவரில் 129 ரன்களை எடுக்க நெல்லை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் களமிறங்கிய நெல்லை அணி தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். ஆனால் பின்னால் வந்தவர்கள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக நின்று ஆடினார்கள்.
15.5 ஓவரில் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து நெல்லை அணி வெற்றி பெற்றது
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது நெல்லை.நெல்லை அணியில் அதிகபட்சமாக குருசாமி அஜிதேஷ் 39 ரன்கள் எடுத்திருந்தார்.