BT Vs LKK : மூன்றாவது முறையாக தோல்வியை தழுவிய திருச்சி..கொண்டாட்டத்தில் கோவை கிங்ஸ்!
டி.என்.பி.எல் 11 வது லீக் போட்டி நேற்று இரவு தொடங்கியது. இதில் திருச்சி அணியை எதிர்கொண்டாது கோவை. டாஸ் வென்ற கோவை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
திருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரரும், அணியின் கேப்டனுமான கங்கா ஸ்ரீதர் ராஜுவை தவிர களம் இறங்கிய மற்ற வீரர்கள் சித்தார்த் பந்தில் டக்-அவுட் ஆனார்கள்
கங்கா ஸ்ரீதர் ராஜு மட்டும் பொறுப்புடன் ஆட அவருக்கு உறுதுணையாக நின்றார் ராஜ் குமார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது திருச்சி.
பின்னர் களமிறங்கிய கோவை அணியின் தொடக்க ஆட்டக்காரர் எஸ்.சுஜய் சிறப்பாக ஆடினார்.சுரேஷ் குமார், சாய் சுதர்சன், ராம் அரவிந்த், யு.முகிலேஷ் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
ஒரு பக்கம் அதிரடியாக ஆடி வந்த எஸ்.சுஜய் 2 சிக்சர், பவுண்டரிகளுடன் 78 ரன்கள் அடித்து கோவை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
18.2 ஓவரில் 119 ரன்கள் அடித்து கோவை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது மூன்றாவது வெற்றியை பதிவுசெய்வதுடன் இரண்டாவது இடத்தையும் தக்கவைத்து கொண்டது கோவை.