HBD MS DHONI: 'நீ சிங்கம் தான்..’ 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தோனியின் கேப்டன்சி ரெக்கார்ட்ஸ்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சி.எஸ்.கே அணியின் இந்நாள் கேப்டனும் ஆனவர் எம்.எஸ்.தோனி. இன்று தனது 42 ஆவது பிறந்தநாளை தோனி கொண்டாடும் நிலையில் அவரது முறியடிக்க முடியாத சில சாதனைகளை இங்கு காண்போம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒருநாள் கிரிக்கெட்டில் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்து சதம் அடித்த ஒரே கேப்டன் தோனி மட்டுமே. 2012 டிசம்பரில் பாகிஸ்தானுக்கு எதிராக 5-டவுன் நிலையில் பேட்டிங் செய்யும் போது சதம் அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் சர்வதேச சதத்தையும் அடித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். 2005 ஆம் ஆண்டில், இலங்கைக்கு எதிரான ஒரு மேட்ச்-வின்னிங் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸ் 15 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களும் விளாசப்பட்டது.
அதிக ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையை எம்எஸ் தோனி படைத்துள்ளார். அவர் 200 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார்.
சர்வதேச டி20யில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 5 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழக்க செய்துள்ளார்.
சர்வதேச டி20யில் 34 ஸ்டம்பிங்குகள், ஒட்டுமொத்த சர்வதேச வாழ்க்கையில் 195 ஸ்டம்பிங்குகள் செய்து அசத்தியுள்ளார் தோனி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -