2023 உலகக்கோப்பை தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய அணி வீரர்கள்!
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான அரையிறுதி கட்டத்தை எட்டியுள்ளது .நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்து அணிகளும் மோதின. 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நான்காவது முறையாக நுழைந்தது இந்தியா. நடைபெற்ற லீக் போட்டிகள் மற்றும் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியை சேர்த்து மொத்தம் நடந்த பத்து போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்தியா. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் கே எல் ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
மூன்றாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இந்த தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
நான்காவது லீக் போட்டியில் பங்களாதேஷை எதிர்கொண்ட இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஐந்தாவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி. இந்த தொடரில் முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஆறாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ஏழாவது லீக் ஆட்டத்தில் 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையணியை வீழ்த்தியது இந்திய அணி. இந்த தொடரில் முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார்
எட்டாவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த தொடரில் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி இந்த தொடரில் ஷ்ரேயஸ் அய்யர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அரையிறுதி போட்டியில் 70 ரன்கள் விதிசாயசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது இந்திய அணி. இந்த தொடரில் முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -