TSK Vs SF: அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்..
நேற்று எம்எல்சி தொடர் 14 வது போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதினர். இதில் முதலில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முன்வந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலன், மேத்யூ வேட் ஆகியோர் களமிறங்கினர் . சிறப்பாக தொடக்கதை தொடக்க ஆட்டக்காரகள கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஃபின் ஆலன் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மேத்யூ வேட் அதிரடியான ஆட்டத்தை ஆரம்பம் முதலே வெளிப்படுத்தினார்.
பின்னர் வந்தவர்களும் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தாலும் தங்களது சிறப்பான பங்களிப்பை அணிக்கு கொடுத்தனர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டு பிளெசிஸ் அவர் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலே ஆட்டமிழந்தார்
பின்னர் டெவோன் கான்வே மற்றும் மிலிந்த் குமார் ஆகியோர் கைகோர்த்து அணியை இலக்கை நோக்கி அழைத்து சென்றனர். டெவோன் கான்வே (30) ரன்களுக்கும் மிலிந்த் குமார்(52) ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய டேனியல் சாம்ஸ் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 18 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட டேனியல் சாம்ஸ் 2 பவுண்டரி 4 சீக்ஸருடன் 42 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்று அவுட் ஆனார். கடைசில் 19.1 ஓவரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 172 ரனகள் எடுத்து வெற்றி பெற்றது. வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற டேனியல் சாம்ஸ்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -