TSK vs MINY : டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறிய மும்பை அணி!
நேற்று நடந்த இரண்டாம் தகுதி சுற்றில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் நியூ யார்க் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற எம் ஐ நியூ யார்க் அணி முதலில் பந்துவீசியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபின்னர் களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க வில்லை. பின்னர் வந்த அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
20 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 158 ரன்கள் எடுத்தது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ். டெவோன் கான்வே அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார்.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய எம் ஐ சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினர்.
சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்களின் பந்தை நாலாப்புறமும் சிதறடித்தனர் எம் ஐ பேட்ஸ்மேன்கள்.
19 ஓவர் முடிவில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 162 ரன்கள் எடுத்து இறுதி போட்டிக்கு முன்னேறியது எம் ஐ நியூயார்க்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -