Kane Williamson : கேன் உலகக் கோப்பை போட்டியில் விளையாட முடியுமா? ஆவலுடன் எதிர்பார்க்கும் நியுசிலாந்து அணி!
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு கிரிக்கெட் வீரர் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் வில்லியம்சன் முழு நேர நியூசிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.
இவர் கேப்டனான பின்னரே, 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு முன்னேறினார். இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தாலும், 10 ஆட்டங்களில் 578 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதை பெற்றார் வில்லியம்சன். பின்னர் வில்லியம்சன் தலைமையிலான 2021 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக் சாம்பியன் டெஸ்ட் போட்டியையும் வென்று முதல் டெஸ்ட் சாம்பியன் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஆனது நியூசிலாந்து அணி.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்திலேயே எல்லை கோட்டுக்கு அருகே பந்தை துள்ளி குதித்து தடுக்க முயன்ற போது கீழே விழுந்து வில்லியம்சன் வலது முழங்காலில் பலத்த காயம் ஏற்ப்பட்டது.
காயம் பலமாக இருந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். இதனை தொடர்ந்து வருகின்ற உலகக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்புள்ளதா என்ற பலர் கேட்டு வந்த நிலையில், நேற்று வில்லியம்சன் பதில் அளித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது என்பது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. உடலை தேற்றுவதற்காக பிசியோ, பயிற்சி உதவியாளர்கள் வகுத்துள்ள திட்டத்தை பின்பற்றி பயிற்சி மேற்கொள்கிறேன். தற்போதைய சூழலில் நான் உலகக் கோப்பையில் பங்கேற்க வாய்ப்பு குறைவுதான். காயத்தில் இருந்து மீண்டு உலகக் கோப்பையில் பங்கேற்பது என்பது உண்மையிலே கடினமான இலக்கு, என்றாலும் உலகக் கோப்பையில் ஆட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உந்துசக்தியாக இருக்கிறது.”
- - - - - - - - - Advertisement - - - - - - - - -