✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்.. சோதனைக்கு உள்ளான ஹர்திக் - கில்!

ஸ்ரீஹர்சக்தி   |  15 Aug 2023 11:43 AM (IST)
1

இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 5வது டி-20 போட்டிக்குப் பிறகு, சர்வதேச போட்டிகளில் பல்வேறு புதிய சாதனைகள் படைத்துள்ளனர் இந்திய வீரர்கள்.

2

2016ம் ஆண்டிற்குப் பிறகு டெஸ்ட் , ஒருநாள் மற்றும் டி-20 என எந்த வகையான கிரிக்கெட் தொடரையும், இந்தியாவிற்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது இல்லை. தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி டி20 தொடரை கைபற்ற தவறியதால், 7ஆண்டு கால சாதனையை முறியடித்த கேப்டன் என்ற மோசமான பெருமைக்கு சொந்தகாரர் ஆனார் ஹர்திக் பாண்டியா.

3

நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 45 பந்துகளில் 61 ரன்களை குவித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். அதேபோல் டி20 தொடரில் முதல் 50 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

4

இந்நிலையில், தொடரை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கக் கூடிய இறுதி போட்டிகளில் அதிக அரைசதம் விளாசியவர்களின் பட்டியலில், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கோலியின் சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்துள்ளார்.

5

நடந்து முடிந்த 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் ஒரு போட்டியில் மட்டும் அரைசதம் எடுத்து மற்ற 4 போட்டிகளில் ஒற்றை ரன் மட்டுமே எடுத்தார் கில். இதன் மூலம், ஒரு தொடரில் அதிக முறை ஒற்றை ரன்களில் ஆட்டமிழந்த இந்திய வீரர் என்ற கே.எல். ராகுலின் பெர்ஃபார்மன்ஸை கில் சமன் செய்துள்ளார்.

6

டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ஒரே தொடரில் 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது இதுவே முதல் முறை. இந்த தோல்வியால் மூலம் ஒரு தொடரில் மூன்று டி20 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை பாண்டியா படைத்தார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்.. சோதனைக்கு உள்ளான ஹர்திக் - கில்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.