Virat Kohli : கிங்கு..கிங்கு தான்..சாதனைகளை குவித்த ரன் மிஷின் விராட் கோலி..!
ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுன்னதாக 2023 ஒருநாள் உலகக் கோப்பையில், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், ரன்களை விரட்டும் போது சதம் அடித்து கோலி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
நேற்று நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் 103 பந்துகளில் 95 ரன்களை குவித்தார் கோலி, இதன் மூலம் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.
இந்த சாதனையின் மூலம் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரரான க்ரிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி உள்ளார்.
கூடுதலாக நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மார்க் சாம்ப்மேன் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரின் கேட்சுகளை கோலி பிடித்து அவர்களை அவுட் செய்தார். இந்த கேட்சு மூலம் அவர் தனது ஒருநாள் போட்டிகளில் 150 கேட்சுகளை பூர்த்தி செய்தார். இதன்மூலம், 50 ஓவர் போட்டிகளில் அதிக கேட்சுகளை பிடித்த நான்காவது வீரர் விராட் கோலி என்ற சாதனையையும் படைத்தார்.
மேலும் இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் விராட்கோலி (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 354 ரன்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 2-வது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (311 ரன்) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -