IND vs BAN: டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு - அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் யார்? சேவாக்கை நெருங்கும் ரோஹித் ஷர்மா

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய அணி வீரர் வீரேந்திர சேவாக். இவர் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 96 சிக்ஸர்களை விளாசி இருக்கிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இந்த பட்டியலில் இரண்டவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தான். இதுவரை ரோஹித் ஷர்மா 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 84 சிக்ஸர்களை விளாசி இருக்கிறார்.

மூன்றாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 78 சிக்ஸர்களை குவித்து இருக்கிறார்.
இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர். இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 69 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார்.
ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் ஜடேஜா. இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளின் விளையாடி 64 சிக்சர்களை அவர் அடித்திருக்கிறார்.
ஆறாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 61 சிக்ஸர்கள் விளாசி இருக்கிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -