HBD Ravichandran Ashwin:டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜா.. தமிழக சுழல் புயல்!அஸ்வின் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
1986 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.தனது சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதிகம் ஆர்வம் கொண்டுள்ளார் 9 வயதிலே கிரிக்கெட் பயணத்தை தொடங்கிவிட்டார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகிளப் லெவல் கிரிக்கெட்டில் இருந்து ஐபிஎல் லில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடினார்.ஐபிஎல்லில்லே.. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதி்த்தார்
2010 ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி இந்தியா இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார்.அவரின் அபார பந்து வீச்சால் இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தற்போது இந்திய டெஸ்ட் கிரிகெட் அணி என்றால் அஸ்வின் இல்லாத அணியை பார்த்திருக்க மாட்டீர்கள்.டெஸ்ட் கிரிக்கெட்டில் ராஜாவாக வளம்வருகிறார்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 100 இன்னிங்ஸ்களில் விளையாடி 516 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரராக உள்ளார்
டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் பத்து முறை மேன் ஆப் தி சீரியஸ் விருதை பெற்றுள்ளார்.116 ஒருநாள் போட்டி விளையாடி 156 விக்கெட்டுகளும்,65டி20 போட்டி விளையாடி 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -