INDIA Records in CWC: ஒரே ஒரு மேட்ச் தான்..மொத்த ரெக்கார்டும் க்ளோஸ்..சாதனைகளை குவித்த இந்திய வீரர்கள்!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஆட்டத்தில், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்களை எட்டியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. மேலும், வெற்றியின் மூலம், 2003ம் ஆண்டிற்குப் பிறகு ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்தை வீழ்த்தியது இல்லை என்ற மோசமான பயணத்தை இந்தியா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது ஒரு உலகக் கோப்பையில் 250+ ரன்கள் என்ற இலக்கை 3 முறை வெற்றிகரமாக சேஸ் செய்த ஒரே அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉலகக் கோப்பையில் அதிகமுறை 4 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை ஷமி நீடித்துள்ளார். - 5 முறை உலகக் கோப்பையில் இரண்டு முறை 5விக்கெட்ஸ் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை தனதாக்கினார் ஷமி. மேலும் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய 3வது வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் (32) சாதனையை தனதாக்கினார் ஷமி .
உலகக் கோப்பையில் அதிக கேட்ச் பிடித்த 3வது வீரர் என்ற சாதனையை கோலி (19) படைத்துள்ளார். கூடுதலாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 150 கேட்ச்களை பூர்த்தி செய்த நான்காவது வீரர் அந்தஸ்தை பெற்றார் கோலி.
நேற்றைய போட்டியில் 14 ரன்களை சேர்த்த போது ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை சேர்த்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார் கில். முன்னதாக தென்னாப்ரிக்கா வீரர் ஆம்லா 40 போட்டிகளில் 2000 ரன்களை சேர்த்து இருந்த நிலையில், கில் வெறும் 38 போட்டிகளில் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டில் 50 சிக்சர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். முதல் 10 ஓவர்களில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்தியர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ரோகித் சர்மா 100 சிக்சர்களை பூர்த்தி செய்துள்ளார் 88 ரன்களை சேர்த்தபோது இலங்கை வீரர் ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளி, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் கோலி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
உலகக் கோப்பையில் அதிக முறை 50+ ரன்களை சேர்த்த வீரர்களின் பட்டியலில் கோலி (12) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் தனது கிரிக்கெட் வரலாற்றில் கோலி நேற்றைய போட்டியில் தான் முதன்முறையாக சரியாக 95 ரன்களை சேர்த்துள்ளார். கோலி பேட்டிங் செய்யும் போது ஒரு கட்டத்தில் 4.3 கோடி பேர் போட்டியின் நேரலையை ஹாட் ஸ்டாரில் கண்டுகளித்தனர். இது ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -