Yuvraj Singh | ட்ரெண்டாகும் யுவி..ட்ரெண்டாகும் Inspiration கதை..
2000-ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் நைரோபியில் ஐசிசி நாக் அவுட் டிராஃபி காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் ஆட்டத்திலேயே அரை சதம் விளாசி ஆட்ட நாயகன் விருதை வென்றார் யுவராஜ் சிங்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅன்றைய உலகின் தலைசிறந்த பௌலர்களான முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே,கிளென் மெக்ராத், வாசிம் அக்ரம், சோயிப் அக்தர், பிரெட் லீ பந்துகளை பந்தாடிய பெருமை யுவராஜ் சிங்க்கு உண்டு.
2007 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அரை சதம் விளாசி இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
2011 உலகக்கோப்பையில் நான்கு அரை சதம் மற்றும் சென்னையில் ஒரு சதம் உட்பட 362 ரன்களை குவித்தார். மேலும் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் நான்கு முறை ஆட்டநாயகன் விருதை வென்றார். 2011 உலகக்கோப்பையின் தொடர் நாகயகனும் அவர் தான்.
2017 ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 39 ரன்கள் எடுத்ததே அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அமைந்தது. இப்போட்டியில் பிஷூ பந்தில் அவர் அவுட் ஆனார்.
2011 உலகக்கோப்பைக்கு பிறகு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 30. மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர் சில மாதங்களிலேயே இந்திய அணிக்கு திரும்பி தான் யார் என்று நிரூபித்தார் யுவராஜ் சிங்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -