AUS vs ENG Ashes: ஆஸி.,யிடம் தூசியான இங்கிலாந்து, 2021 ஆஷஸ் முதல் டெஸ்டில் ஆஸி.,க்கு அபார வெற்றி
பிரிஸ்பேன் கபா மைதானத்தில் தொடங்கிய ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடிசம்பர் 8-ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அதிரடியாக பேட்டிங் செய்தது. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 425 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. சிறப்பாக பேட்டிங் செய்த டிராவிஸ் ஹெட் 152 ரன்களும், டேவிட் வார்னர் 94 ரன்களும், மார்கஸ் லபுஷானே 74 ரன்களும் எடுத்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து,. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. மிகவும் பின் தங்கி இருந்த இங்கிலாந்து இன்று நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
இன்று போட்டி தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. டேவிட் மலான், ஜோ ரூட்டின் விக்கெட்டுகளுக்குப் பிறகு அடுத்து களமிறங்கிய பேட்டர்கள் அவுட்டாகி வெளியேறினர். இதனால், 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 19 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.
இதனால், 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஹாரிஸ் ஓப்பனிங் களமிறங்கினார். ராபின்சன் பந்துவீச்சில் கேரி அவுட்டாக, லபுஷானே களமிறங்கினார். ஆனால், போட்டி தொடங்கிய 5.1 ஓவரில் இலக்கை எட்டி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -