Asia Cup 2023 : ‘ஃபிட்டாக இல்லன்னா ஏன் தேர்வு செய்கிறீர்கள்?’பொங்கி எழுந்த ஸ்ரீகாந்த்!
கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி வருகின்ற ஆசிய கிரிக்கெட் கோப்பைக்கான வீரர்கள் பட்டியல் வெளியானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் அஜித் அகர்கர், கே.எல். ராகுல் முழுமையாக இன்னும் உடற்தகுதிபெறவில்லை. இதன் காரணமாக, செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கே.எல். ராகுல் விளையாட மாட்டார் என தெரிவித்தார்.
ஆனால் கே.எல்.ராகுல் ஆசிய கோப்பைக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கே.எல்.ராகுலுக்கு உடற்தகுதி இல்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு உடற்தகுதி இல்லை என்றால் அவரை அணியில் சேர்க்காதீர்கள். தேர்வின் போது ஒரு வீரர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவரை தேர்வு செய்யக்கூடாது. அதுதான் எங்கள் கொள்கை. கே.எல்.ராகுலை உலக கோப்பைக்கு தேர்வு செய்ய விரும்பினால், அவரை உலக கோப்பைக்கு தேர்வு செய்யுங்கள், அது வேறு விஷயம். அவருக்கு பதிலாக வேறு வீரரை தேர்வு செய்யலாம். கே.எல்.ராகுலுக்கு பதிலாகதான் நாங்கள் சஞ்சு சாம்சனை அழைத்து செல்கிறோம் என்று கூறுவது என்ன விதத்தில் நியாயம்..?” என்றார்.
ஸ்ரீகாந்த், “இந்திய அணியில் இவ்வாறு உடற் தகுதி இல்லாத வீரரை ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்வது சரியான முடிவல்ல..உலகக் கோப்பையை போல் ஆசிய கோப்பையும் முக்கியம் தான்”என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்தின் இந்த கருத்திற்கு பல கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -