Indian Cricket Team Pics: கோலி ரிட்டர்ன்ஸ், 2வது டெஸ்ட்டுக்கு ரெடி! இந்திய அணியின் பயிற்சி புகைபப்டங்கள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஆடி வரும் நியூசிலாந்து அணி டி20 தொடரை இழந்த நிலையில், டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திராவின் நிதானமான மற்றும் பொறுப்பான பேட்டிங்கால் கடைசி விக்கெட்டை இழக்காமல் ஆடி போட்டியை போராடி டிரா செய்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த நிலையில், இந்த தொடரின் கடைசி போட்டியான இந்தியா- நியூசிலாந்து மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மும்பையில் தொடங்க உள்ளது.
நியூசிலாந்து அணியில் கடந்த டெஸ்ட் மூலம் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் அணிக்கு திரும்பினார். நாளை தொடங்க உள்ள டெஸ்ட் போட்டி மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அணிக்கு திரும்ப உள்ளார். இதன்மூலம் இந்திய அணி மேலும் உற்சாகம் அடைந்துள்ளது.
இந்திய அணியில் விராட்கோலி மீண்டும் கேப்டனாக களமிறங்க உள்ளதால், கடந்த போட்டியில் களமிறங்கிய முக்கிய வீரர்களில் ஒருவர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தொடக்க வீரர் மயங்க் அகர்வால், கடந்த போட்டியில் சதம், அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ், புஜாரா, ரஹானே யாராவது ஒருவர் அவர்களது இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவர்களில் மயங்க் அகர்வால் வெளியேற்றப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணியில் சுப்மன் கில்லும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த போட்டியின் இரு இன்னிங்சிலும் சதம், அரைசதம் அடித்து அசத்தினார். அவர் மட்டுமே கடந்த போட்டியில் சிறப்பாக பேட் செய்தார். புஜாரா, ரஹானேவின் பேட்டிங் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
வேகப்பந்துவீச்சைக் காட்டிலும் அஸ்வின், அக்ஷர் படேல், ஜடேஜா சுழலில் அசத்தி வருகின்றனர். அஸ்வினும், ஜடேஜாவும் பேட்டிங்கில் ஜொலிப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். போட்டி நாளை நடைபெற உள்ள மும்பை வான்கடே மைதானம் எப்போதுமே இந்தியாவிற்கு ராசியான மைதானம் என்பதால், இந்த போட்டியில் இந்தியா வென்று நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -