India vs Australia : 2003 - 2023 உலகக்கோப்பை தொடர்களுக்கு என்ன வித்தியாசம்?
2003 இல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீழ்த்தியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appலீக் தொடர்களில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி அரை இறுதிக்கு முன்னேறியது. அரை இறுதியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து, 2003 உலகக்கோப்பையை தட்டிச் சென்றது.
அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் நடந்த அத்தனை போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாதனை படைத்தது ஆஸ்திரேலியா அணி
நடப்பு உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்தியாவுடன் மோதிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தோல்வியை தழுவியது. பலம் வாய்ந்த இந்திய அணி லீக் தொடர்களில் ஒன்பது போட்டிகளை எதிர் கொண்டு அனைத்திலும் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. கோப்பை தொடரில் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியா கிரிக்கெட் அணியுடன் தோல்வியை தழுவியுள்ளது.
அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி, அவர்களை எழுபது ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் முதலாவது அணியாக நுழைந்தது. கோப்பை தொடரில் பலம் வாய்ந்த இந்திய அணி லீக் தொடர்களில் ஒன்பது போட்டிகளை எதிர் கொண்டு அனைத்திலும் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
நாளை நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி வெற்றி பெற்றால் தொடர்ந்து 11 வெற்றிகளை பதிவு செய்து, உலகக் கோப்பையை வென்றிருக்கும் ஆஸ்திரேலியா அணியின் சாதனையை சமன் செய்யும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -