தொட்ட இடமெல்லாம் வெற்றி.. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் களம் காணும் இந்தியா!

நடப்பு உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிகள் முடிந்து இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறியுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
வரும் நவம்பர் 19 தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரு அணிகளும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐந்து முறை உலக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் ஒன்பது முறை தகுதிபெற்றுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி எட்டு முறை அரை இறுதியில் வென்றுள்ளது.
1975,1987,1996,1999,2003,2007,2015,2023 ஆகிய உலகக் கோப்பை தொடர்களின் அரை இறுதி போட்டியை ஆஸி வென்றுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் மட்டுமே ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிப்போட்டியை வெல்லப்போவது யார்? என்ற ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்களிடையே காணப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -