IND Vs WI: எளிமையாக வெற்றி பெற்ற இந்தியா... ஏமாற்றத்தில் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் -இந்திய அணிக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் பெவிலியன் திரும்ப தொடங்கினர்
இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஒற்றை ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரர் கிஷன் சிறப்பாக ஆடி அரைசதம் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் 5 விக்கெட் வீழ்த்தினாலும், இந்திய அணியின் வெற்றியை அவர்களால் தடுக்க முடியவில்லை. 22.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்தியா. 6 ரன்கள் விட்டுகொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்திய குல்தீப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.