Shimron Hetmyer : ‘இனி சும்மா அதிருமில்ல...’ ஓராண்டுக்கு பின்னர் ஒரு நாள் போட்டியில் களமிறங்கும் ஷிம்ரான் ஹெட்மயர்!
இந்திய அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள், மற்றும் ஐந்து டி20 போட்டிகளை விளையாட வெஸ்ட் இண்டீஸிற்கு ஒரு மாதத்திற்கு பயணம் சென்றுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மழையால் இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இதனால் 1-0 என்ற கணக்கில் இந்திய ஆணி வெற்றி பெற்றது.
தற்போது நாளை நடக்கவிருக்கும் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இந்த வீரர்கள் பட்டியலில் ஷிம்ரான் ஹெட்மயர் இடம்பெற்றுள்ளார். இவர் ஓராண்டுக்கு பின்னர் ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடக்கும் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் அதிக இளம் வீரர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -