IND Vs SA T20 : 17 வருட தவம்.. சாதித்து காட்டிய ரோஹித் அண்ட் கோ!
இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று 2024 டி 20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியை விளையாடினர். (Photo Credits : PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தனர். (Photo Credits : PTI)
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி உள்ளிட்டோர் தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பெற்று இருந்தனர். (Photo Credits : PTI)
2024 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. (Photo Credits : PTI)
ரோஹித் ஷர்மா, சூர்ய குமார் யாதவ் அவுட்டாகிய பின் களமிறங்கிய கோலி, அரை சதம் அடித்து கலக்கினார். 20 ஓவர் முடிவில் 176 ரன்களை எடுத்த இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிற்கு 177 என்ற இலக்கை நிர்ணயம் செய்தது. (Photo Credits : PTI)
இரண்டாவது இன்னிங்ஸில் பூம்ரா, அக்சர் விக்கெட் எடுத்து அசத்தினர். மார்க்ரம், கிளாசென் அவுட்டாகினர். கடைசி நிமிடத்தில் விளையாடி வந்த மில்லர் அவுட்டான பின்னர், 7 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. (Photo Credits : PTI)
டி20 உலகக் கோப்பையை பொறுத்தவரை இரு அணிகளுக்கும் இடையே 6 போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 4 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்த நிலையில், நேற்று நடந்த போட்டியின் மூலம் இந்தியா தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 5 வது முறை வெற்றி பெற்றது. (Photo Credits : PTI)
2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, கிரிக்கெட் வரலாற்றில் 50 டி20 போட்டிகளில் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றார். இந்திய அணியில் இருந்த ஒவ்வொரு வீரரும் அவரவர்களின் பணியை செம்மையாக செய்ததே, இந்த இறுதிப்போட்டியை சிறப்பாக்கியது. (Photo Credits : PTI)
வெற்றி பெற்ற இந்திய அணியினர் கண்கலங்கி, ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்தனர். இந்திய ஜனாதிபதி முர்மு, இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மகளிரணி தேசியத் தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். (Photo Credits : PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -