IND vs AUS Final 2023: மைதானத்தில் கண்ணீர் வெள்ளம்.. வீரர்கள், ரசிகர்கள் கண்களில் கரைபுரண்ட கண்ணீர் துளிகள்..!
உலகக் கோப்பை 2023ல் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த தோல்வியால், உலகின் மிகப்பெரிய மைதானத்தில் வீரர்களும், ரசிகர்களும் கண்ணீர் சிந்திய புகைப்படங்கள் பார்ப்போரை கண் கலங்க செய்தது.
இந்தத் தோல்வி மைதானத்தில் இருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் இதயங்களை கிழித்தது.
போட்டி முடிந்ததும் ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரின் கண்களில் இருந்து வரும் கண்ணீர் பல வலிகளை வெளிப்படுத்தியது.
இந்திய விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் போட்டி முடிந்தவுடன் மிகவும் சோகமாக காணப்பட்டார்.
ரோகித் சர்மா பெவிலியன் நோக்கி திரும்பும் போது, அவரது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
இந்த முழு உலகக் கோப்பை பயணத்தையும் பார்த்தால், இந்தியா அபாரமாக செயல்பட்டது.
இந்த உலகக் கோப்பை போட்டியில் இறுதிப் போட்டியைத் தவிர ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோற்கவில்லை.
இந்த போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -