Rohit Sharma Photos : மகளுடன் ஹோலி கொண்டாடிய ஹிட் மேன்.. வைரலாகும் ரோஹித் ஷர்மாவின் போஸ்ட்!
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. களத்தில் விதவிதமான ஷாட்களை விளாசும் இவருக்கு ஹிட் மேன் என்ற பெயரும் உண்டு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டின் ஐபிஎல் சீசன் தொடங்கிவிட்டதால் அவ்வப்போது ட்ரெண்டாகி வருகிறார்.
கெரியரில் பிசியாக இருக்கும் இவர், தனிப்பட்ட வாழ்க்கையில் நேரத்தை செலவிட தயங்கவே மாட்டார்.
தனது நீண்ட நாள் காதலியான ரித்திகா சஜ்தேவை ஆசை ஆசையாக காதலித்து 2015 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்
இந்த இணையருக்கு 2018ல் பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு சமைரா என பெயரிட்டனர்
இந்நிலையில் வண்ணங்களின் பண்டிகையான ஹோலியை தன் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். தனது மகளுடன் குழந்தையாகவே மாறி விளையாடும் ரோஹித் ஷர்மாவின் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -