INDvsSL, 1st Test, Day1: விராட் கோலி 100வது டெஸ்ட்... முதல் நாள் அப்டேட்ஸ் சுருக்கமாக!
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டி விராட் கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டி என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.
ஓப்பனிங் களமிறங்கிய மயங்க், ரோஹித் இணை இந்திய அணி 50 ரன்களை எட்டும் வரை விக்கெட் இழப்பின்றி விளையாடியது. அதனை அடுத்து, ரோஹித் (29) ரன்களுக்கு ஆட்டமிழக்க, மயங்க் (33) ரன்களுக்கு வெளியேறினார். ஒன் டவுன் களமிறங்கிய விஹாரி சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய பண்ட், அதிரடியாக விளையாடி 96 ரன்கள் எடுத்தார். அவர் சதம் கடப்பார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டபோது, லக்மல் பந்துவீச்சில் பவுல்டாகி அவுட்டானார்.
ஸ்ரேயாஸ் (27) ரன்களுக்கு வெளியேற, ஜடேஜா (45) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்கிறார். பண்ட் மற்றும் ஜடேஜா இணை 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பண்ட் அவுட்டான பிறகு அஷ்வின் களமிறங்கி இருக்கிறார்.
இதனால், முதல் நாள் ஆட்டம்நேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 357 ரன்கள் எடுத்திருக்கிறது.