IND vs SL pics: தொடர்ந்து 11 போட்டிகளில் வெற்றி... டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 இடம்! கெத்து காட்டும் இந்திய அணி
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் ஆடி வருகிறது.
முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து, இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது.
ஓப்பனிங் களமிறங்கிய இலங்கை அணி பேட்டர்கள் பவர்ப்ளே முடியும் வரை விக்கெட் இழப்பின்றி ரன்கள் சேர்த்தனர். போட்டியின் 9வது ஓவரில்தான், ஜடேஜா வீசிய பந்தில் முதல் விக்கெட் சரிந்தது. அதனை அடுத்து சாஹல் பந்துவீச்சில் இரண்டாவது விக்கெட் சரிந்தது.
இதனால், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது இலங்கை அணி.
சேஸிங் களமிறங்கிய இந்திய அணிக்கு, 1 ரன்னில் அவுட்டாகி ரோஹித் அதிர்ச்சி அளித்தார். ஒன் டவுன் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அதிராடியாக விளையாடி 74 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சஞ்சு சாம்சன் 39 ரன்களும், ஜடேஜா 45* ரன்களும் எடுத்து ரன் சேர்க்க, 17.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி இந்திய அணி போட்டியை வென்றது.