Indian Cricket Team : கண் கலங்கிய கிரிக்கெட் வீரர்கள்..கரம் பிடித்து ஆறுதல் தெரிவித்த பிரதமர் மோடி!
2023 உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அரையிறுதி சுற்றில் நியூசிலாந்த் அணியையும் தோற்கடித்து இறுதி சுற்றுக்கு சென்றது இந்திய அணி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநவம்பர் 19 ஆம் தேதியன்று இந்திய அணியும் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஆஸிஸ், 6வது முறையாக கோப்பையை வென்றனர்.
இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு கலங்கினர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைப்பெற்ற இந்த போட்டியில் இந்திய பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.
கடைசி வரை போராடிய இந்திய அணி வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் ஆறுதல் கூறினார் மோடி.
2023 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிவடைந்த பின்னர் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -