IND vs NZ practice session: புதிய கேப்டன், புதிய கோச், புதிய ஆரம்பம்! இந்திய கிரிக்கெட் அணி பராக்!
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது. இதைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நவம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தத் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா கேப்டனாகவும், கே.எல்.ராகுல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். விராட் கோலிக்கு இந்த தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டது.
இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவும், இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் இந்தத் தொடரில் முதல் முறையாக செயல்பட உள்ளனர்.
இந்தத் தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அனுபவ தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் டி20 உலகக் கோப்பையை போல் இந்தத் தொடருக்கும் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை
“இந்திய அணி வீரர்கள் பயமின்றி ஆடலாம். ஒரு அணியில் ஆல்-ரவுண்டரின் பங்கு மிக முக்கியமானது. தேவைக்கு ஏற்ப, ஒவ்வொரு வீரரும் அவர்களது பொறுப்புகளை மாற்றி கொள்ள வேண்டும். விராட் கோலி மிக முக்கியமான வீரர். அவர் அணிக்கு திரும்பு நேரம், இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேரும்” என ரோஹித் ஷர்மா தெரிவித்திருக்கிறார்
ரோகித் சர்மா(கேப்டன்),கே.எல்.ராகுல்(துணை கேப்டன்),இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர்,ரவிச்சந்திரன் அஸ்வின், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், யுஸ்வேந்திர சாஹல்,புவனேஸ்வர் குமார்,ஹர்சல் பட்டேல்,அவேஸ் கான், தீபக் சாஹர், முகமது சிராஜ்,அக்சர் பட்டேல்,ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -