Sania Mirza and Shoaib Malik: ஷோயப் மாலிக் அடிக்க, சானியா கைதட்ட! வைரலாகும் மேட்ச் புகைப்படம்
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கும் கடந்த 2010-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்நிலையில், டி-20 உலகக்கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்த மாலிக், வெறும் 18 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து சர்வதேச டி-20 கிரிக்கெட்டில், அதிவேகமாக அரை சதம் கடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.
ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியை நேரில் காண மைதானம் சென்றிருக்கிறார் சானியா மிர்சா.
39 வயதான ஷோயப் மாலிக்கின் இந்த அதிரடி ஆட்டம் மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சரவெடி விருந்தாக அமைந்திருந்தது.
மாலிக் அரை சதம் கடந்தபோது, அவருக்கு கைத்தட்டி உற்சாகம் அளித்தார் சானியா. இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது
ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டம் காட்டிய மாலிக், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -