IND vs BAN 2nd Test:'நாங்க அடிச்சா அடி விழது இடிதான் விழும்' - கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனை செய்த இந்தியா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம், சதம், 150 , 200 மற்றும் 250 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை 147 ஆண்டுகால வரலாற்றில் இந்திய அணி படைத்திருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர் விளாசிய வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா செய்துள்ளார். இதற்கு முன்னர் உமேஷ் யாதவ் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை செய்துள்ளனர்.
அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் போட்டியிலும் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணி வீரர் விராட் கோலி படைத்திருக்கிறார். இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களில் படைத்தார். தற்போது கோலி 594 இன்னிங்ஸில் முறியடித்திருக்கிறார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் யஜஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளார். அவர் 31 பந்துகளில் இந்த சாதனையை செய்துள்ளார். முதல் இடத்தில் 28 பந்துகளில் அரைசதம் விளாசி ரிஷப் பண்ட் உள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.
அந்த வகையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வங்கதேச அணியை விட 52 ரன்களில் முன்னிலை வகிக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -