Ravichandran Ashwin:ஆசிய மைதானங்களில் அதிக விக்கெட் - கும்ப்ளே வின் சாதனையை முறியடித்த அஸ்வின்! டாப்பில் யார்?
ஆசிய மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 97 டெஸ்ட் போட்டியில் 612 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகான்பூரில் நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 31 ரன்னில் அஸ்வின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார் . அந்த வகையில் நஜ்முல் ஹொசைன் ஷான்டோவின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் அஸ்வின் முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டினார். அதாவது ஆசிய அளவில் டெஸ்டில் 420 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
மூன்றாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே. ஆசிய மைதானங்களில் 82 போட்டிகள் விளையாடியுள்ள இவர் 419 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
நான்காவது இடத்தில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரங்கனா ஹெராத் இருக்கிறார். அவர் 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 354 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங். 71 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
ஆறாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ். 86 டெஸ்ட் போட்டிகளில் ஆசிய மைதானங்களில் விளையாடியுள்ள இவர் 279 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -