ICC Test Bowler Ranking 2024:ஐசிசி டெஸ்ட் தரவரிசை:டாப்பில் இருக்கும் அஷ்வின்! பும்ரா, ஜடேஜாவிற்கு எந்த இடம்?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தை இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் பிடித்துள்ளார். அந்தவகையில் 871 புள்ளிகளை அவர் பெற்றுள்ளார்.
இரண்டாம் இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. 854 புள்ளிகளுடன் அவர் இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஸ் ஹசல்வுட் இந்த பட்டியலில் 847 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இருந்த இவர் தற்போது கீழே தள்ளப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பாட் கம்மின்ஸ் 820 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கசிகோ ரபாடோ 820 புள்ளிகளுடன் நான்கவது இடத்தை பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறியுள்ளார். அதன்படி, 804 புள்ளிகளுடன் அவர் ஆறாவது இடத்தில் உள்ளார். டாப் ஆறு வீரர்களில் மூன்று வீரர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.