World Cup : உலக கோப்பையை 1,20,000 அடி உயரத்தில் பறக்கவிட்டு சாதனை படைத்த ஐசிசி!
அக்டோபர் மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளனர். இதில் முதல் 8 அணிகள் தேர்வாகிவிட்டது. இன்னும் இரண்டு அணிகள் தேர்வாவதற்கான தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது.
இந்த போட்டி இந்தியாவில் நடக்க உள்ளதால் 2023 உலக கோப்பையை இந்தியா வெல்ல வாய்ப்புள்ளதாக பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறிகின்றனர்.
உலக கோப்பை 2023 அட்டவணை இன்று ஐசிசி தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது. அட்டவணையில் குறிப்பிட்ட படி, முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கும் அதே இடத்தில் இறுதி போட்டியும் நடைபெறவுள்ளது.
பிரமோஷன் செய்யும் விதமாக உலக கோப்பையை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும், மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா போன்ற 18 நாடுகளுக்கும் எடுத்து செல்ல உள்ளனர்.
இந்த உலக கோப்பையை உலகமே அறிய செய்யும் வகையில் பிரத்யேகமான பலூனில் கோப்பையை வைத்து விண்வெளிக்கு அனுப்பினர். அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. அந்த பலூனை மீண்டும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலேயே பத்திரமாக இறக்கினர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -