தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான் அணி!
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி நேற்று மோதின இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபேட்டிங் செய்ய வந்த ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். அவ்வப்போது இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பௌலிங்கை பிரித்து மேய்ந்தார்கள்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக குர்பாஸ் மற்றும் ஜத்ரன் சிறப்பான தொடக்கம் தந்தனர். ஜத்ரன் நிதானமாக ஆட, அதிரடி காட்டிய குர்பாஸ் அரை சதம் கடந்தார்.
ஜத்ரன் 28 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ரஹ்மத்தும் மூன்று ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் போர், சிக்ஸர் என இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே தடுமாறியது. சொர்ப்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார்கள்.
இங்கிலாந்து 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த முஜிபுர் ரஹ்மான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -