Asian Champion Trophy : யுஸ்வேந்திர சாஹலுக்கு குரல் கொடுத்த ஹர்பஜன் சிங்!
ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணியை சமீபத்தில் வெளியிட்டது பிசிசிஐ.
இந்த பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பெயர் இடம்பெறவில்லை. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
33 வயதான அவர் கடந்த இரண்டு வருடங்களாக அணியில் பெரும் பங்கை அளித்து வருகிறார். அவர் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை அணியில் கூட இடம்பிடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்பதனால் முன்னணி வீரர்களும் வேதனை அடைந்தனர்.
இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
அந்த பதிவில் யுஸ்வேந்திர சாஹல் இல்லாததுதான் அணியின் ஒரே குறை என்று நான் உணர்கிறேன். உண்மையான சுழற்பந்து வீச்சாளரைப் பற்றி நீங்கள் பேசினால், இந்தியாவில் இதைவிட சிறந்த ஸ்பின்னர் யாரும் இல்லை என்று நான் நினைக்கிறேன். ”
மேலும், “ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அவர்தான் சிறந்தவர். அவரது கடைசி சில ஆட்டங்கள் சிறப்பாக இல்லைதான், ஆனால் அது மட்டும் அவரை ஒரு மோசமான பந்துவீச்சாளராக்க முடியாது, என்றார் ஹர்பஜன்.