புஜாராவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரா 2010 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த புஜாரா டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி எப்போதெல்லாம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சரிவில் இருந்தாலும் ஒற்றை தடுப்பணையாக புஜாரா அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுப்பார்.
பிசிசிஐ டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தால் அதில் புஜாரா பெயர் இல்லாமல் இருந்ததில்லை. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கான பங்களிப்பில் புஜாராவின் பங்களிப்பு அளப்பரியது என்று சொல்லலாம்.
கடந்த 2023 ஜூன் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடிய புஜாரா தற்போது வரை இந்திய அணியில் இடம் பெறாமல் உள்ளார்.
“புஜாராவை இந்திய அணி ஒதுக்குவது இந்திய அணிக்கு ஆபத்தானது” என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -